எங்கள் தரம்

தனித்துவமான விற்பனைத்
திட்டம்

ars 550D features
quality tmt bars from ars steel

தரக் கட்டுப்பாடு

நிறுவனம் எப்போதும் தனது வாடிக்கையாளரின் அனுபவத்தை மேம்படுத்துவதை உறுதி செய்கிறது; எனவே OES (ஆப்டிகல் எமிஷன் ஸ்பெக்ட்ரோமெட்ரி) மற்றும் தயாரிப்புகளின் மேக்ரோ பகுப்பாய்விற்கான ஆய்வக வசதிகள் போன்ற உள்-நிறுவன வசதிகளைக் கொண்டுள்ளது. ARS 550D TMT கம்பிகளின் இந்த ஸ்பெஷல் தரம் ARS “550D Fe 550D” எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இதில், "Fe" என்பது இரும்பைக் குறிக்கிறது, "550" குறைந்தபட்ச அழுத்த வலிமையையும் "D" என்பது நீளுமைத் தன்மையையும் குறிக்கிறது. அதிக நீளுமைத் தன்மையானது அதிர்ச்சியைத் தாங்கும் திறனை அதிகரித்து, ARS 550D பூகம்பம் மற்றும் 500 டிகிரி செல்சியஸ் வரையிலான தீயை எதிர்க்கக் கூடியது என்பதை வெளிப்படுத்துகிறது. விழுமியங்கள், அர்ப்பணிப்பு மற்றும் தனது வாடிக்கையாளர்களுக்குச் சிறந்ததை வழங்குவதற்கான வலுவான தூண்டுதலால் ARS 550D, BIS -ஆல் பட்டியலிடப்பட்டுள்ள தரக் கட்டுப்பாட்டு வரையறைகளையும் விட அதிக தரத்தில் இருப்பதை உறுதி செய்கிறது.

ARS தயாரிப்பு சிறப்பம்சங்கள்

  1. நிச்சயமான சேமிப்பு (தோராயமாக ரூ. 4000/ -) - இறுதிப் பயனாளருக்கு - முன்னணி மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனமான SERC- யால் சான்றளிக்கப்பட்டவாறு
  2. பல ஆண்டுகளாகத் தொடரும் D தர நிபுணத்துவம். 100% "D" தரம் (அதாவது. குறைந்த கந்தகம், குறைந்த பாஸ்பரஸ்)
  3. TMT பிரிவுக்கு தென்னிந்தியாவில் முதன்முறையாக ஒவ்வொரு சரக்கு அனுப்புதலுக்கும் சர்வதேச சோதனை முகமை (SGS) மூலம் உள்நாட்டு மூன்றாம் தரப்பு தரப் பரிசோதனை
  4. BIS சான்றளிக்கப்பட்டது
  5. உயர் தர மூலப் பொருட்களைப் பயன்படுத்தி உற்பத்தி
  6. அதிகரித்த அதிர்ச்சியைச் தாங்கும் திறன்
  7. அதிக நீளுமைத் தன்மை
  8. வானளாவிய கட்டிடங்கள், நீர்த் தேக்கங்கள், விரைவுச் சாலைகள், பாலங்கள், குடியிருப்பு வளாகங்கள் போன்றவற்றுக்கான வலுவான, பாதுகாப்பான மற்றும் பத்திரமான அடித்தளம்.

ஆய்வகம் மற்றும்
பரிசோதனை

instant report from ars steel

வளைத்தல் மற்றும் நிமிர்த்துதல் பரிசோதனை

வளைத்தல் மற்றும் நிமிர்த்துதல் பரிசோதனை என்பது ஸ்டீலின் தரத்தைச் சோதிப்பதற்கான ஒரு பரிசோதனை முறையாகும். இந்தப் பரிசோதனையில் ஸ்டீலில் கீறல் மற்றும் விரிசல்கள் ஏதேனும் உள்ளனவா என சோதித்துப் பார்க்கலாம். இந்தப் பரிசோதனையின் முடிவுகள் ஸ்டீல் கம்பிகளில் விரிசல் அல்லது சிதைவைக் கண்டறிய ஒரு வளைத்தல்/நிமிர்த்தல் சோதனை விளக்கப்படத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

மார்டன்சைட் மற்றும் வளையப் பரிசோதனை

மார்டென்சைட் (வளையம்) பரிசோதனை என்பது பரிசோதனையின் போது உருவான வளையங்களைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் ஸ்டீலின் கடினத் தன்மை, நீளுமைத் தன்மை மற்றும் வலிமையை சரிபார்க்கின்ற ஒரு தரக் கட்டுப்பாட்டுச் சோதனையாகும்.

இழுவிசைப் பரிசோதனை

இழுவிசைப் பரிசோதனை என்பது ஸ்டீலின் அழுத்த வலிமை மற்றும் இழுவிசை வலிமையை சோதிக்கப் பயன்படுகின்ற யுனிவர்சல் டெஸ்டிங் மெஷினில் (UTM )ஸ்டீலின் இழுவிசை வலிமையைச் சோதிக்கும் பரிசோதனையாகும்.

தணித்தல் செயல்முறை

தணித்தல் என்பது சில மூலப்பொருள் பண்புகளைப் பெறுவதற்காக வெப்பப்படுத்தப்பட்ட ஒரு உலோகத்தைத் தண்ணீர், எண்ணெய் அல்லது காற்றின் மூலம் விரைவாகக் குளிர்விக்கும் செயல்முறையாகும். ஸ்டீலில் கடினத்தன்மை இந்த செயல்முறை மூலமாக பெறப்படுகிறது.

பில்லெட் உற்பத்தி

செவ்வகமான அல்லது உலோகப் பட்டை வடிவத்தில் உள்ள புதிதாகத் தயாரிக்கப்பட்ட ஸ்டீல், ஸ்டீல் பில்லட் எனக் குறிப்பிடப்படுகிறது. பில்லட்டுகள் நேரடியாகத் தொடர்ச்சியான வார்ப்பு அல்லது வெளியேற்றத்தின் மூலம் அல்லது மறைமுகமாகப் பில்லட் ஆலைகளில் சூடான உருட்டல் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஸ்பெக்ட்ரோ பகுப்பாய்வு சோதனை

ஸ்பெக்ட்ரோ பகுப்பாய்வு சோதனை என்பது உள்வரும் ஆய்வு, உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு முன் ஸ்டீலை அடையாளபடுத்தி, வரிசைப்படுத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

SGS சான்றிதழ்

சான்றளிக்கும் நிறுவனத்தால் ஆய்வு, சரிபார்ப்பு, பரிசோதனைக்குப் பிறகான அங்கீகாரமே SGS சான்றிதழ் ஆகும். இந்த அங்கீகாரமானது அரசாங்கம் மற்றும் தரப்படுத்தல் அமைப்புகளால் நிர்ணயிக்கப்பட்ட தேவைகளை இந்தத் தயாரிப்பு பூர்த்தி செய்கிறது என்பதை உறுதி செய்கிறது.