எங்களைப் பற்றி

எங்கள் குழுமத்தைப் பற்றி

ஏ.ஆர்.எஸ் எனர்ஜி மற்றும் ஏ.ஆர்.எஸ் ஸ்டீல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஏ.ஆர்.எஸ் குழுமம் 1990 செப்டம்பர் 19 ஆம் தேதி அன்று ஏ.ஆர்.எஸ் மெட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் எனும் பெயரில் நிறுவப்பட்டது. உலகின் ஒரு வல்லரசு நாடாக ஆக வேண்டும் எனும் இந்தியாவின் குறிக்கோளை அடைவதற்கு உதவவும், நாட்டின் ஒரு மிக முக்கியமான உற்பத்தி மையமாக தென்னிந்தியா, முக்கியமாக, தமிழ்நாடு ஆவதற்கு உதவவும் ஏ.ஆர்.எஸ் நிறுவப்பட்டது.

நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், அதனை நிறுவிய-இயக்குனர்களான திரு. அஸ்வனி குமார் பாட்டியா மற்றும் திரு. ராஜேஷ் பாட்டியா ஆகியோர் எரிசக்தி மற்றும் எஃகு தொழில்துறையை மேம்படுத்தியுள்ளனர், மேலும் வெளிநாடுகளில் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதில் தாங்கள் கொண்டுள்ள நிறைந்த அளவிலான அனுபவத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

ஒரு ISO 9001 மற்றும் 14001 சான்று பெற்ற எஃகு உற்பத்தியாளரான ஏ.ஆர்.எஸ் ஸ்டீல், நாட்டின் மிகப்பெரிய தூண்டல் உலை அடிப்படையிலான எஃகு ஆலைகளில் ஒன்றாகும்.

2010 ஆம் ஆண்டில், ஒரு புதிய 25-டன் உற்பத்தி திறன் கொண்ட உலையை நிறுவி எங்கள் பில்லெட் உற்பத்தியை அதிகரித்தோம், இது உலை மற்றும் உருட்டல் ஆலை ஆகிய இரண்டின் உற்பத்தி திறனையும் முறையே ஆண்டுக்கு 1,30,000 மெட்ரிக் டன்கள் மற்றும் 1,80,000 மெட்ரிக் டன்களாக அதிகரித்தது.

மற்றொரு 25 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட உலையை நிறுவி எங்கள் தற்போதைய எஃகு உருக்கும் ஆலையை மேலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம், இதன் மூலம் பில்லெட் உற்பத்தி மற்றும் உருட்டல் ஆலையின் உற்பத்தி திறன் இரண்டையும் 2,50,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகரிக்கிறோம்.

vision and mission of ars

கண்ணோட்டம்

ஒரு நிறுவனமாக எங்களுடைய குறிக்கோள் மிகவும் திறன் மிக்க மற்றும் மிகச் சிறந்த ஸ்டீல் உற்பத்தித் திறன் ஆகும். எங்களுடைய அதிகபட்ச திறனை எட்டுவதற்காக எங்கள் உற்பத்தி செய்யும் உத்தியில் ஆட்டோமேஷனை அடைய விரும்புகிறோம்.

பணிகள்

  • ARS இன் கண்ணோட்டத்துக்கு உயிரூட்டுவதற்காக, அதன் விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு
  • தனிச் சிறப்புடைய நவீன தொழில்நுட்பத்தை தொடர்வதற்கு
  • அனைத்து செயல் எல்லைகளிலும் புதிய வரையறைகளை அமைப்பதற்கு
  • சிறந்த திறமைகளை உருவாக்கி, மேம்படுத்தி, தக்க வைத்துக் கொள்வதற்கு
  • அனைத்து வாடிக்கையாளர்களிடமும், பங்குதாரர்களிடமும் நம்பிக்கைக்கு வழிவகுக்கும் நெறிமுறை மற்றும் உயர் தர நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கு
ars factory in gummidipundi

தொலைநோக்கு குறிக்கோள்/ பணி

தொலைநோக்கு குறிக்கோள்

எல்லையில்லா கண்டுபிடிப்பு மூலம் புதிய தொழில்துறை அளவுகோல்களை அமைத்தும் புதிய தலைமுறை தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்கியும் ஏ.ஆர்.எஸ், எஃகு தொழில்துறையில் முன்னிலை வகிக்க விரும்புகிறது.

பணி

புதிய வணிக மாதிரிகளை உருவாக்கி செயல்படுத்துதல். சிறந்த செயல்திறனுக்கு சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல். சிறந்த ஆதாரங்களை கண்டறிந்து வாங்குதல், மேம்படுத்துதல் மற்றும் தக்க வைத்துக் கொள்ளுதல். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலையில் மிகத்தரமான சேவைகளை வழங்குதல். நீண்ட கால உறவுகளை பராமரித்திட எங்கள் வாடிக்கையாளர்கள், சேனல் பார்ட்னர்களின் எதிர்பார்ப்புக்கும் கூடுதலாக பூர்த்தி செய்யவும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்.

ars steel and power chairman
திரு அஸ்வனி குமார் பாட்டியா,
நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர்

எம்.டி இன் செய்தி

ஏ.ஆர்.எஸ் உறுதியான நம்பிக்கை மற்றும் தெளிவான எதிர்காலத்தைப் பற்றிய குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டதாகும். ஒரு விசுவாசம், அர்பணிப்பு உணர்வு கொண்ட தொழிற்துறை வல்லுநர்கள் நிறைந்த குழு மற்றும் தெளிவான எதிர்காலத்திய குறிக்கோள்கள் கொண்ட தலைவர்களின் தலைமையின் கீழ் இயங்குகின்ற எங்கள் நிறுவனத்தை, எங்கள் மிகவும் விசுவாசமான அர்ப்பணிப்புடன் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஒவ்வொரு கல்லாக கட்டியெழுப்பியுள்ளனர். ஏ.ஆர்.எஸ் பிராண்டு இன்று அடைந்திருக்கும் பெருமை, புகழ் ஆகிய அனைத்தும் பல ஆண்டுகளாக வாடிக்கையாளர் நம்மிடம் கொண்டிருக்கும் நம்பிக்கை மற்றும் இடைவிடாத ஆதரவு ஆகியவற்றினால் உருவானதேயாகும். ஏ.ஆர்.எஸ். இந்த பல ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு அசைக்க முடியாத உறுதியான இடத்தைப் பிடித்துள்ளது மற்றும் எஃகு மற்றும் மின்சார தொழிற்துறையில் மிகச்சிறந்த சப்ளையராக உருவெடுத்துள்ளது.

இருமடங்காக்க எங்கள் எஃகு மற்றும் மின் உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற அடுத்தடுத்துள்ள சந்தைகளில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், வெளிநாடுகளில், குறிப்பாக தெற்காசிய நாடுகளில் உலகெங்கிலும் உள்ள வாய்ப்புகளை அடைவதற்கான வழிகளையும் ஆராய்ந்து வருகிறது. எஃகு மற்றும் மின்சார துறையில் நிலவும் புதிய சவால்களின் மத்தியில், வாடிக்கையாளர் தேவை மற்றும் சப்ளையை பேலன்ஸ் செய்வது மட்டுமல்லாமல் தொடர்ந்து நிலையான வளர்ச்சியையும் அடைவதற்கு, ஏ.ஆர்.எஸ் அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகங்களின் தேவைகளை நன்கு புரிந்து கொள்வதற்கு இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டும். அப்போதுதான், அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க முடியும்.

எந்தவொரு புதிய மேம்பாடும் தொழில்முனைவோர் சிந்தனையும் முயற்சியும் தொழிலில் சில குறுகிய கால தடைகளை உண்டாக்கும், ஆனால் ஏ.ஆர்.எஸ் குடும்பம் நீண்ட கால வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை அடைய இந்த தடைகளை எப்போதும் கடந்து வந்திருக்கிறது மற்றும் இனிமேலும் கடக்கும்.

எங்கள் நிறுவனத்தின் நீடித்த மற்றும் இலாபகரமான வளர்ச்சிக்கான அவர்களின் மதிப்புமிக்க முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு மூலம் ஒவ்வொரு ஆண்டும் இதை சாத்தியமாக்குவதற்காக எனது சக ஊழியர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மைல்கல்

2019 உற்பத்தி திறன் 1,80,000MT ஆக உயர்த்தப்படும்

ars steel factory